விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குங்கள் – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விவசாய அமைச்சர் பணிப்பு!

Friday, March 4th, 2022

எரிபொருள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை உடனடியாக வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

அநுராதபுரம், அம்பாறை, பொலன்னறுவை, குருநாகல், மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் எரிபொருளைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் அதிருப்தி வௌியிட்டுள்ளனர்.

இந்தநிலையிலேயே, விவசாயிகளுக்கு எரிபொருளை உடனடியாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:


கற்பித்தல் நேர அட்டவணை மாற்றத்துடன் எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் வழமைக...
சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யும் 11 பாரிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்ற...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஏற்பாடு - எதிர்வரும் 24 ஆம் திகதி கதிர்காமக் கந்தனின் திருவுருவ...