பொரளை தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படாது – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, January 16th, 2022

கொழும்பு பொரளை தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டினால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்திலை என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

அத்துடன் விசாரணைகள் முடிவடைவதற்கு சில காலம் எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைக்குண்டினை தேவாலயத்தில் வைத்தவரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பதற்கு பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு பல நாட்கள் அவசியம் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மதவழிபாட்டுத்தலங்களிற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களிற்கு விசாரணைகள் குறித்த தகவல்கள் வழங்கப்படாத போதிலும் விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ள அவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் விமர்சனங்கள் குறித்தும் பதிலளித்துள்ளார்.

அத்துடன் அந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் நீண்டகால நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் அது பலனளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் குறித்து திருப்தியடையாவிட்டால் கர்தினால் தனக்கு திருப்தியளிக்கும் விதத்தில் படையினரை விமர்சிக்கலாம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் குற்றவாளிகளிற்கு எதிரான ஆதாரங்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன்னால் சமர்பித்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவேண்டும்- அரசாங்கத்தின் முன்னேற்றத்தை குலைப்பதற்கான சதிமுயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களை நாங்கள் கையாள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: