பயங்கர காட்டுத்தீ – ரஷ்யாவில் அவசரநிலை பிரகடனம்!
Thursday, August 1st, 2019
ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீ காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புகளில் உள்ள மரங்கள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து பரவி வரும் இந்த தீ காரணமாக 6.7 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது.
அங்கு நிலவி வரும் வறண்ட வானிலை மற்றும் வேகமாக வீசி வரும் காற்றால் இந்த காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு அந்த பகுதிகளில் வாழும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
காட்டுத்தீயை அணைக்க நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் 20 விமானங்கள் மூலம் தண்ணீரை கொட்டி தீயை கட்டுப்படுத்த ரஷ்ய பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.
Related posts:
வங்கதேசத்தில் போர் குற்றங்களில் ஈடுபட்ட ஜமாத் தலைவரின் மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்!
மின்னணு தொழில்நுட்பம் மூலம் பண மோசடி குற்றங்களை கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஏற்றுகொண்டார...
வட கொரியாவுக்கு மேலும் தடைகள்!
|
|
|


