மின்னணு தொழில்நுட்பம் மூலம் பண மோசடி குற்றங்களை கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஏற்றுகொண்டார்!

Sunday, July 31st, 2016


மோசடி மற்றும் மின்னணு தொழில்நுட்பம் மூலம் பண மோசடி செய்துள்ள குற்றங்களை, குவாட்டமாலா கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரயன் ஜிமினஸ் நியூயார்க் நீதிமன்றத்தில் ஏற்றுகொண்டுள்ளார்.

ஒவ்வொரு குற்றத்திற்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனையினை  அவர் பெறுகின்ற வாய்ப்பு உள்ளது.

ஃபுளோரிடாவை அடிப்படையாக கொண்ட நிறுவனம் ஒன்றிற்கு, நாட்டின் உலகக் கோப்பை தகுதிசுற்று போட்டிகளின் இலாபகரமான விற்பனை உரிமைகளை வழங்குவதற்கு, பல்லாயிரக்கணக்கான அமெரிக்க டொலர்களை கையூட்டாக அவர் பெற்றிருப்பதாக அரசு தரப்பு சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஜனவரி மாதம் குவாட்டமாலாவில் கைது செய்யப்பட்ட அவர், உலக கிண்ண விளையாட்டு நிர்வாக அமைப்பான பிஃபாவின் மிக பெரிய ஊழல் புலனாய்வின் ஒரு பகுதியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: