வட கொரியாவுக்கு மேலும் தடைகள்!
Friday, December 2nd, 2016
வட கொரியாவின் தொடர் அணு ஆயுத சோதனைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதன் மீதான தடைகளை ஐ.நாவின் பாதுகாப்பு சபை மேலும் கடுமையாக்கியுள்ளது.
இந்த புதிய நடவடிக்கைகள் நாட்டின் முக்கிய ஏற்றுமதிகளில் ஒன்றான நிலக்கரியை 60 சதவீத அளவிற்கு குறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளன.
தாமிரம் உள்ளிட்ட பிற கனிம ஏற்றுமதிகளுக்கும் தடை விதிக்கப்படுகின்றது.வட கொரியா, செப்டம்பர் மாதத்தில் மிகப்பெரிய அணு ஆயுத சோதனையை நடத்தியது, அதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.அந்த நிலையில், கூடுதல் தடைகளை விதிக்கும் முயற்சிகள் நகைச்சுவைக்குரியது என்று வட கொரிய அரசு அதனை நிராகரித்தது.

Related posts:
செவாலியே விருது பெறுகின்றார் கமல்ஹாசன்!
உக்ரைன் மக்களுக்கு பெலாரசில் அடைக்கலம் கொடுத்த ரஷ்யா!
இந்தியாவின் 29 ஆவது மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்ற ஜனாதிபதி அனுர தயாராகி வருகின்றார் - குமார...
|
|
|


