தமிழக மீனவர்களின் ஒப்புதல் பெற்றே கச்சதீவில் தேவாலயம் கட்ட வேண்டும்: ஜெயலலிதா

Sunday, May 15th, 2016

தமிழக மீனவர்களின் ஒப்புதல் பெற்ற பின்னரே கச்சதீவில் புதிய தேவாலயத்தை கட்டவேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று எழுதியுள்ளகடிதத்தில்,

கச்சத்தீவில் உள்ள பழமை வாய்ந்த புனித அந்தோனியார் தேவாலயத்தை இடித்து விட்டு, இலங்கை அரசு புதிய தேவாலயம் கட்ட உள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்தோனியார் தேவாலயமானது தமிழக கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம், தஞ்சாவூர்,ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மீனவர்களுக்கு ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நூற்றாண்டுகளாக புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற திருவிழாவின் போது, தேவாலயத்தை இடித்து, மீண்டும் கட்ட வேண்டும் என்ற திட்டத்தை அங்குள்ள பாதிரியார்கள் முன்வைத்தனர்.

அதற்கு தமிழக மீனவர்கள், “அந்தோனியார் தேவாலயமானது தமிழகம், இலங்கை மீனவர்களின் பாரம்பரிய தலமாக உள்ளது.எனவே, இரு தரப்பினரும் சேர்ந்துதான் கட்டுமானத்தைமேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

ஆனால், தற்போது தமிழக மீனவர்களை கேட்காமல் தேவாலயத்தை இடித்து புதிதாக தேவாலயம் கட்ட இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக முடிவு செய்துள்ளது திட்டமிட்டசெயலாக தோன்றுகிறது.

அவ்வாறு, ஒருதலைப்பட்சமாக தேவாலயத்தை இடித்து மீண்டும் கட்டினால், பாரம்பரியமாக தாங்கள் அங்கு சென்று வழிபடுவது எதிர்காலத்தில் தடுக்கப்படலாம் என தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, இலங்கை அரசின் தன்னிச்சையான இந்த செயலை உடனடியாக தடுக்க நடவடிக்கைஎடுப்பதுடன், இந்த பிரச்சினையில் தொடர்புடைய தமிழக மீனவர்களுடன் இலங்கை அரசுகலந்து பேசி, அதன் பின்னரே இப்பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளைமேற்கொள்ள வேண்டும்.

தமிழக மீனவர்களின் ஒப்புதலை பெற்ற பின்னர் இந்தியாவும், இலங்கையும் கூட்டாகசேர்ந்து, தேவாலயத்தை மீண்டும் கட்டுவதற்கு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

பிரதமர் இப்பிரச்சினையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று முதல்வர்ஜெயலலிதா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts: