வளைகுடா பிரஜைகள் சவுதிக்குள் நுழைய தடை !

Thursday, March 5th, 2020

வளைகுடா நாட்டுப் பிரஜைகள் மற்றும் வளைகுடா வாழ் மக்கள் ஆகிய அனைவரும் சவூதி அரேபியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்திருப்பதன் காரணமாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி நியூஸ் எஜென்ஸி செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், ஓமான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளிலிருந்து சவூதிக்கு வர விரும்புபவர்கள் கடந்த 14 நாட்கள் அந்ததந்த நாடுகளில் தங்கி, எந்த விதமான கொரோனா வைரஸ் தாக்கமும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே சவுதிக்குள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்படும் என சவூதி உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

சவூதியில் நேற்று (02.03.2020) முதல் கொரோனா வைரஸ் நோயாளி அடையாளம் காணப்பட்டார். அவர் ஈரானுக்கு அண்மையில் சென்று நாடு திரும்பிவராவார். ஈரானுடன் வளைகுடா நாடுகள் அதிகம் தொடர்பை கொண்டுள்ளன. இதுவரை வளைகுடா நாடுகளில் 141 கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனவே கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி நியூஸ் எஜென்ஸி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: