நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வெட்கக்கேடானது – இஸ்ரேல்!

Sunday, December 25th, 2016

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புப் பணிகளை நிறுத்த கோரும் ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதுடன் வெட்கக்கேடான அந்த தீர்மானத்தை இஸ்ரேல் பின்பற்றாது என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கூறியுள்ளார்.

மேலும், இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நியூசிலாந்து மற்றும் செனிகலில் உள்ள தன்னுடைய தூதுவர்களை இஸ்ரேல் ஆலோசனைக்காக திரும்ப அழைத்துள்ளது.

மேலும், செனிகலுக்கு வழங்கி வந்த உதவித் திட்டங்களை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.இந்தத் தீர்மானம் சர்வதேச சட்டத்துக்கு கிடைத்த வெற்றி என பாலஸ்தீன பேச்சாளர் சாயீப் எரிகட் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் முக்கிய ஆதரவு நாடான அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

_93117428_gettyimages-630304608

Related posts: