மன்னிப்பு கேட்ட மார்க் ஜூக்கர்பெர்க்!

Thursday, October 5th, 2017

மக்களை சேர்ப்பதற்கு பதிலாக பிரித்து விட்ட தருணத்திற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்வதாக மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

யூதர்களின் வருடாந்திர புனித தினத்தையொட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

அதில், நான் உருவாக்கிய சமூக வலைதள கட்டமைப்பான பேஸ்புக் மற்றும் அதன் செயல்பாடுகள் மக்களை சேர்ப்பதற்கு பதிலாக பிரித்து வருகிறது.அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

என்னை மேம்படுத்திக் கொண்டு சரியாக செயல்பட முயற்சிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.விளம்பரங்கள் மூலம் பேஸ்புக் பொய் பிரசாரம் செய்து வருவதாக உலகின் பல நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

2016-ல் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை குறிவைத்து ரஷ்யா 3000 விளம்பரங்களை வெளியிட்ட நிலையில் தேர்தலில் அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.உலக நாடுகளின் தொடர் குற்றச்சாட்டுகளை அடுத்தே மார்க் வருத்தம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

Related posts: