அரசியல் ரீதியான தீர்வைக் காண புதிய அரசியல் யாப்பு அவசியம் – பிரதமர்

Sunday, July 9th, 2017

நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு அரசியல் ரீதியான தீர்வைக் காண புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பது அவசியமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா உட்பட சகல நாடுகளும் இலங்கைக்கு உதவி வருகின்றன. இதற்கு நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு அரசியல் ரீதியான தீர்வைக் காண புதிய அரசியல் யாப்பைத் தயாரிப்பது அவசியமாகும்.

மன்னார் எழுத்தூர் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டத்தை மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார். இந்த நிழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயெ அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் –

யுத்தம் முடிவடைந்தாலும் இதுவரை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. பயங்கரவாதத்திற்கு முடிவு காணப்பட்டாலும் இனவாதம் மேலும் தலைதூக்கியுள்ளதாக பிரதமர் கவலை வெளியிட்டார்.

தாம் எதிர்க்கட்சியில் இருந்தபோது மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இது பற்றி தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார். நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது பற்றி கவனம் செலுத்துவது அவசியமாகும்.இதற்காக பாராளுமன்றம் அரசியல் அமைப்புப் பேரவையாக செயற்படுகின்றது. நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணக்கூடிய அரசியல் யாப்பபைச் சமர்ப்பித்து அரசியல் தீர்வுகளை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தியை ஏற்படுத்துவது அவசியமாகும்.

அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதலிடத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியும் தாமும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசியல் யாப்பில் பௌத்த மத்திற்காக முதலிடத்தை தொடர்ந்தும் பேணத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கூறினார்.  யுத்தத்தினால் பொருளாதாரம் சீர்குலைந்தது. இன வாதத்தினாலேயே யுத்தம் ஏற்பட்டது. இதனால் பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் தலைதூக்கியதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Related posts: