சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக மூன்று புதிய சட்டமூலங்களை நிறைவேற்ற திட்டம் – இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவிப்பு!

Friday, January 12th, 2024

சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக மூன்று புதிய சட்டமூலங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

 “மறுபுறம், பாலின சமத்துவ மசோதா மூலம் பாலின சமத்துவ உரிமைகளை உறுதிப்படுத்த பாடுபடுவேன்“ என அவர் கூறினார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் –

LGBTIQ உட்பட பாலின சமத்துவ கவுன்சில் ஒன்று நிறுவப்பட வேண்டும் . சபையின் கீழ், அரச நிறுவனங்களுக்கு பாலின சமத்துவம் இன்றி குறித்த அதிகாரிகள் ஆட்சேர்ப்பு மற்றும் நியமனம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும், பெண்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அவர்களது பிள்ளைகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 02 வருடத்திலிருந்து 05 வருடங்களாக மாற்றியமைக்கப்படும் என கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

அத்துடன், இதுவரை 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட எத்தனை தாய்மார்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பதைக் கண்டறிய பிரதேச செயலக மட்டத்தில் தரவுகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகு அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: