வருடத்தின் முதல் 15 நாள்களில் 5,892 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தகவல்!

Thursday, January 18th, 2024

நாடளாவிய ரீதியில் இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 5,892 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த டெங்கு நோயாளர்களில் 1,956 பேர் மேல் மாகாணத்திலே பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களில், 1,228 பேர் கொழும்பு மாவட்டத்திலே பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் 86,232 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்தநிலையில், கொழும்பு மாவட்டத்தின் பொரளை, போன்ற இடங்களில் நேற்றைய தினம் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

டெங்கு நோய்க்கு உள்ளான 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவியொருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


அமரர் சிங்ஸிலி செல்வக்குமாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரிய...
நாட்டின் நிதி நெருக்கடிக்கு அரசு மட்டுமே பொறுப்பல்ல - நாடாளுமன்றம் மூலமே தீர்வு காண்பது அவசியம் - அம...
“வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் - அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நி...