100 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

Monday, June 27th, 2016
யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு இடங்களுக்கு கொண்டு செல்லுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிரந்த 100கிலோ கேரள கஞ்சா விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாரிய கடத்தல் முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட வளலாய்அக்கரை கடற்பகுதியில் வைத்தே இன்று(27) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
அக்கரை கடற்பகுதியினுடாக 100 கிலோ கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்ற இருவர், குறித்த பகுதியில் வைத்து வேறொருவருக்கு கைமாற்ற முயற்சித்துள்ளனர். இந்நிலையில் இக் கடத்தல் சம்பவம் தொடர்பாக விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பட்ட இரகசிய தகவலைய அடுத்து, கடத்தல் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் குறித்த கடற்கரை பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கண்கானிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது அதிகாலை நான்கு மணியளவில் குறித்த கடற்கரை பகுதிக்கு இருவர் மேற்படி கேரள கஞ்சாவை கடத்திவந்திருந்த நிலையில், அதனை அங்குள்ள கடத்தல்காரர்களிடம் கையளிப்பதற்காக காத்திருந்துள்ளனர்.
இந்நிலையில் விஷேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்த கேரள கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் மாதகல் பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றைய நபர் வளலாய் பகுதியை சேர்ந்தவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: