வடக்கிற்கான தொடருந்து சேவைகள் ஜனவரி 7 முதல் தற்காலிகமாக நிறுத்தம் – தொடருந்து திணைக்களம் அறிவிப்பு!.
Wednesday, December 27th, 2023
வடக்கிற்கான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
சேவை இடைநிறுத்தம் தொடர்பில் திணைக்களம் மேலும் தெரிவிக்கையில் –
வடக்கு தொடருந்து மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு தொடருந்து மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே தொடருந்து சேவைகள் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மீனவர் பிரச்சினை குறித்து விஷேட பேச்சுவார்த்தை!
யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்
இலங்கைக்கு உதவி செய்ய பிரித்தானிய பிரதமர் இணக்கம் - பிரதமர் ரணில் தகவல்!
|
|
|
மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 பேர் வாக்களிக்க தகுதி - 6 ஆசனத்துக்காக 17 கட்சிகளும் 28 சுயேட்ச...
ரவிராஜ் படுகொலை: பொய்யான சாட்சிகளை தயாரிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் குற்றப்புலனாய்வு திணைக்களத்...
ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் - வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு - புதிய முதலீடுகள் தொட...


