வடக்கு மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அடுத்த வாரம் அடையாள பணிபகிஷ்கரிப்பு!

Friday, May 11th, 2018

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அடுத்த வாரம் அடையாள பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், பணிப்புறக்கணிப்பால் நோயாளர்களக்கு ஏற்படவுள்ள சிரமங்களுக்கு வடமாகாண சபையும் அதன் அதிகாரிகளுமே பொறுப்பு கூற வேண்டும்.

இந்நிலையில். வடக்கு மாகாணத்தில் யாழ் போதனா வைத்தியசாலை தவிர்;;த்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அடுத்த வாரம் அடையாளப் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடாத்தவுள்ளது.

திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் பணிபகிஷ்கரிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றறிக்கையின் அடிப்படையில் அரச மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவு கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை.

வடக்கு மாகாணத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மட்டும் அவை வழங்கப்படவில்லை இது தொடர்பாக அரச மருந்து அதிகாரிகள் தாய் சங்கம் பல தடவைகள் வடக்கு மாகாண சுகாதார அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோரியிருந்தது.

அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் வடக்கு மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருடனும் மாகாண சுகாதார பணிப்பாளருடனும் பேச்சு நடத்தியது.

மேலதிக கொடுப்பனவு சிறிது காலத்தில் வழங்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர் எனினும் இதுவரை காலமும் வழங்கப்படவில்லை.

கிழக்கு மாகாணம் உட்பட இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சு அதிகாரிகளின் அசமந்த போக்கால் நாம் பணிப்புறக்கணிப்பை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் நேரத்தில் உயிர் காக்கும் அவசர சிகிச்சைகள் அனைத்து மருத்துவமனைகளிலும் வழங்கப்படும். எமக்கு உரிய பதில் வழங்கப்படாவிட்டால் பேராட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: