முஸ்லிம் குடும்பத்தில் கிறிஸ்துவ சிறுமி: நீதிமன்றம் ஆணை!

Friday, September 1st, 2017

பிரித்தானியாவைச் சேர்ந்த ஐந்து வயது கிறிஸ்தவ சிறுமி ஒருவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த வளர்ப்பு குடும்பத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தார்.

அப்போது அவர் அங்கு கடும் மன உளைச்சலுக்கு ஆளனதால், சிறுமியை அவளின் உறவினர் ஒருவரின் நிரந்தரப் பராமரிப்பில் விட வேண்டும் என்று லண்டனில் உள்ள டவர் ஹேம்லட்ஸ் கவுன்சில் தெரிவித்திருந்தது.

இது தொடர்பான வழக்கு இலண்டனில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தை தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கான உத்தரவு பின்னர் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.கிறிஸ்துவ சிறுமியான அவரின் மீது, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இவர்கள் தங்களில் பழக்க வழக்கங்களை திணித்ததாகவும், ஆங்கிலம் பேசமாட்டார்கள் என்றும் குழந்தைகளின் நலத்தை மனதில் வைத்தே செயல்படுவதாக டவர் ஹேம்லட்ஸ் கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: