பனாமா லீக்ஸ்’ விவகாரம்- ஐஸ்லாந்து நாட்டில் புதிய பிரதமர் நியமனம்

Friday, April 8th, 2016

‘பனாமா லீக்ஸ்’ என்றழைக்கப்படுகிற பனாமா ரகசிய ஆவண தகவல்கள் உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பனாமா நாட்டில் ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தின் பிரதமர் சிக்மண்டூர் டேவிட்டும், அவருடைய மனைவியும் ஏராளமான பணத்தை பதுக்கி உள்ளதாக தெரியவந்தது.

இதன்காரணமாக தலைநகர் ரெயிக்ஜவிக்கில் கூடி, பிரதமருக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் அந்த நாட்டின் புதிய பிரதமராக மீன் வளத்துறை மந்திரி சிகுர்துர் இங்கி ஜோஹன்சன் நேற்று நியமிக்கப்பட்டார்.

அந்த நாட்டில் விரைவில் பொதுத்தேர்தல்களை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனவே விரைவில் அங்கு தேர்தல்கள் நடத்தப்படலாம் என தெரிகிறது.

Related posts: