தடுப்பு பட்டியலில் 28 சீன அமைப்புக்கள்!

Wednesday, October 9th, 2019


சீனாவில் வீகர் இன மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகளவில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த வன்முறை சம்பவம் தொடர்பில் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்படுவதை அடுத்து அமெரிக்கா 28 சீன அமைப்புகளைத் தடுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.

இவ்வாறு அமெரிக்காவால் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 28 நிறுவனங்களால் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து எந்தப் பொருட்களையும் கொள்வனவு செய்யவோ சீனாவுக்குள் இறக்குமதி செய்யவோ முடியாது. இந்த நிறுவனங்கள் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்கா வணிக துறையின் தரவு ஒன்று கூறுகிறது.

இதேவேளை, மேற்கு சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில், விசாரணையின்றி இலட்சக்கணக்கான முஸ்லிம்களை அடைத்து வைத்திருப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. இதேநேரம் சீனாவின் 100 கணக்கான முஸ்லிம்கள் வாழ்ந்த கிராமங்கள் பல அழிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான தகவல்களை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.

சில வீடியோ காட்சிகளையும் செய்மதி புகைப்படங்களையும் வெளியிட்டு இவ்வாறு அங்கு முஸ்லீம் கிராமங்கள் அழிக்கப்படுவதற்கான ஆதாரங்களையும் வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.

இதேவேளை அங்குள்ள சில முகாம்களில் 100 க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் முகாம்களுக்கு மிகப்பெரும் அளவு பாதுகாப்பு கேமராக்களை பொருத்தி முகாம் தொடர்பான தகவல்களை தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. ஆனால் பல நாடுகளும் பல ஊடகங்களும் முன்வைக்கும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எதை பற்றியும் சீனா வாய்திறக்கவில்லை.

Related posts: