தொடர்ந்தும் சீனாவுக்கான விமானச் சேவைகள் நிறுத்தம்!
Friday, February 21st, 2020
இந்திய அரசின் விமான சேவை நிறுவனமான எயார் இந்தியா, சீனாவுக்கான தனது விமானச் சேவைகளை தொடர்ந்தும் இடைநிறுத்தியுள்ளது.
அடுத்த மாதம் 28 ஆம் திகதி வரை சீனாவுக்கான விமானச் சேவைகள் எவற்றையும் முன்னெடுக்கப் போவதில்லை என எயார் இந்தியா விமானச் சேவை நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கொவிட் -19 தொற்று காரணமாக, ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையிலேயே, எயார் இந்தியா நிறுவனம் குறித்த இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
Related posts:
ரஷ்யாவை முற்றாக தடை செய்ய கனடா ஆதரவு!
வைத்தியர்களில் 57% பேர் போலிகள் - சுகாதாரத்துறை தகவல்?
இண்டிகோவுடனான ஏர்பஸ் ஒப்பந்தத்தை பாராட்டிய பிரித்தானிய பிரதமர்!
|
|
|


