ரஷ்யாவை முற்றாக தடை செய்ய கனடா ஆதரவு!

Tuesday, July 19th, 2016

அடுத்த மாதம் பிரேஸிலின் றியோ டீ ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து ரஷ்யாவை முற்றாக தடை செய்யுமாறான கோரிக்கைக்கு கனடா தனது ஆதரவினை வழங்கியுள்ளது.

ஒலிம்பிக் விதிமுறைகள் சிலவற்றை ரஷ்யா மீறியுள்ளதாக தெரிவித்து, ஒட்டுமொத்த ஒலிம்பிக் போட்டியில் இருந்தே ரஷ்யாவை தடை செய்யவேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தியுள்ள நிலையில், கனடாவும் தனது ஆதரவினை வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் பட் ஹிக்கி தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்யாவை தடைசெய்யுமாறான கோரிக்கையை விடுக்கும் நாடுகளில் அமெரிக்காவும், கனடாவுமே முன்னணியில் திகழ்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சில விதி மீறல்கள் காரணமாக ரஷ்யாவுக்கு ஏற்கனவே விளையாட்டுத்துறை தடைகள் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஐரோப்பிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் பட் ஹிக்கி, அதேவேளை குறித்த இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முழுமையான அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னர், ரஷ்யாவை முற்றுமுழுதாக தடைசெய்யக் கோரும் அமெரிக்கா மற்றும் கனடாவின் முனைப்பு தன்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல், ஒலிம்பிக் போட்டியில் இருந்து ரஷ்யாவை தடைசெய்யக் கோரும் இந்த முனைப்புக்கு ஜேர்மனி, நியூசிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளின் விளையாட்டுத் துறையினரின் ஆதரவும் பலமாக உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts: