பாகிஸ்தானில் போலியோ ஒழிப்பு திட்டத்தில் முக்கிய பங்காற்றிய மருத்துவர் சுட்டுக் படுகொலை!

Monday, September 12th, 2016

 

வட மேற்கு பாகிஸ்தானில் அரசின் போலியோ ஒழிப்பு திட்டத்தில் முன்னணி பிரமுகரான மருத்துவர் ஒருவரை அடையாளம் தெரியாத ஆயுததாரியால் சுட்டு படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.

மருத்துவர் ஸாக்கா உல்லா கான் பெஷாவரில் இருந்த தன்னுடைய வீட்டிற்கு அருகே நெருங்கிக் கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.சமீப ஆண்டுகளில், போலியோ நோய்த்தடுப்பு பிரசாரங்களில் ஈடுபட்ட 80க்கும் அதிகமானோரை இஸ்லாமியவாதிகள் கொன்றுள்ளனர்.

போலியோ சுகாதாரப் பணியாளர்கள் முஸ்லிம் விரோத செயல்களில் ஈடுபடுவதாக இஸ்லாமியவாதிகள் குற்றம் சாட்டுகின்றனர். உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில்தான் போலியோ தாக்குதல் அதிகமாகக் காணப்படுகிறது.

150302234753_pakistan_polio_512x288_ap_nocredit

Related posts: