சசிகலாவின் சிறைவாசம் முன்கூட்டியே கணிக்கப்பட்டதா..? ஆரூடம் கூறிய நாட்காட்டி

Wednesday, February 15th, 2017

உலகலாவிய ரீதியில் இன்று ஆரூடம் பல்வேறு விடயங்களில் செல்வாக்கு செலுத்தியுள்ளது. அரசியல் உள்ளிட்ட விடயங்களில் இன்று இடம்பெறும் சில சம்பவங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அவை குறித்து ஆதாரங்களுடன் கடந்த காலங்களில் பல செய்திகளும் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தமிழக அரசியல் இன்று உச்சகட்ட பரபரப்பை அடைந்துள்ளது.

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு பின்னர் தமிழக அரசியலில் புயல் வீச தொடங்கியது. அந்த புயலின் தாக்கம் இன்று வரையிலும் ஓய்ந்தபாடில்லை.

ஆட்சியையும், அதிகாரத்தையும் கைப்பற்ற ஒரே கட்சியை சேர்ந்த இரண்டு தரப்பினர் போட்டிப்போட்டு கொண்டிருக்கின்றனர்.

காபந்து அரசின் முதலமைச் ஓபிஎஸ் மற்றும் அ.தி.மு.க கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளர் வீ.கே.சசிகலா ஆகியோரிடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.

குறித்த இருவரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கவேண்டும் என தமிழக பொறுப்பு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஆளுநர் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகின்றார்.

வீ.கே.சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாக இருந்தமை ஆளுநரின் மௌனத்திற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இன்று வீ.கே.சசிகலா குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சசிகலாவின் கைது தொடர்பிலும் பஞ்சாங்க நாட்காட்டி ஒன்றில் ஆரூடம் வெளியிட்டுள்ளது. குறித்த நாட்காட்டியில் வெளியாகியுள்ள நற்சிந்தனையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நீதியை விட காலம்தான் உண்மையை வெளிக்கொண்டு வருகின்றது” என அந்த நாட்காட்டியின் நற்சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியாயின் சசிகலாவின் கைது முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளதா என பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

SASIKALA-SOT_1

Related posts: