துருக்கிய இராணுவ சதி முயற்சி முடிவுக்கு வந்தது!

Saturday, July 16th, 2016

துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ சதிமுயற்சி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி டையிப் எர்துவான் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தமது அரசாங்கம் உறுதி செய்துள்ளதாகவும் துருக்கி ஜனாதிபதி கூறியுள்ளார். சதிமுயற்சியுடன் தொடர்புடைய 130 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புடைய மேலும் பலரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன..

ஆயினும், இஸ்தான்புல் நகரில் தொடர்ந்தும் துப்பாக்கிப் பிரயோக சத்தங்கள் மற்றும் வெடிச் சத்தங்கள் கேட்டவண்ணமுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன்.

அங்காரா நகரில் நேற்றிரவு ஏற்பட்ட மோதல்களில் குறைந்தபட்சம் 60 பேர் உயிரிழந்திருக்கலாம்  எனவும் இதேவேளை, இராணுவ சதிமுயற்சியை அடுத்து, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த இஸ்தான்புல் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன், தொலைக்காட்சி ஔிபரப்புகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: