தெரசா மே மிக துணிச்சலாக உள்ளார் – ட்ரம்ப்!

Thursday, March 23rd, 2017

பிரித்தானியாவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் அந்நாட்டின் பிரதமர் தெரசா மே மிகவும் துணிச்சலாக இருக்கிறார் என்றும், துரிதமாக செயல்பட்டுள்ளார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் லண்டன் மாநகரில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் பயங்கரவாத தாக்குதல் நடத்தியதில் பொலிசார் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காயமடைந்துள்ளனர் மேலும் தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் சுட்டுக்கொன்றுள்ளனர். பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பிரித்தானியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய பிரதமருடன் டொனால்ட் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்துள்ளார். மேலும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு மட்டுமல்லாமல் பிரித்தானியாவிற்கு ஏதேனும் உதவி வேண்டுமா எனவும் கேட்டறிந்ததாக டொனால்ட் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் தெரசா மே மிகவும் துணிச்சலாக இருப்பதாகவும், துரிதமாக இந்த பிரச்சனையை கையாண்டுள்ளார் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Related posts: