அமெரிக்கா- ரஷ்யா இடையே இராஜதந்திர முரண்பாடு உச்சம்!

Thursday, August 3rd, 2017

ரஷ்யாவிற்கு எதிராக தடைகளை விதிப்பதற்கு அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளமை மற்றும் ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் ஊழியர்களை குறைப்பது தொடர்பான ரஷ்யாவின் தீர்மானம் ஆகியன இரு நாட்டிற்கும் இடையிலான இராஜதந்திர ரீதியிலான பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளன.

2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதற்கான தண்டனையாக ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிப்பதற்கு அமெரிக்க பிரதிநிதிகள் அவை மற்றும் செனட் சபையில் உடன்பாடு எட்டப்பட்டது.

அதேபோன்று, ரஷ்யாவிலுள்ள அமெரிக்க தூதரக ஊழியர்களை எதிர்வரும் செம்டம்பர் முதலாம் திகதி முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரஷ்யாவின் தீர்மானத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

இந்நடவடிக்கையானது விசா நடைமுறைகள் மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் என்பவற்றில் தாமதங்களை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts: