சுற்றுலா விமானம் விபத்து : 4 பேர் உயிரிழப்பு!

Tuesday, August 7th, 2018

அமெரிக்காவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் கடல் மட்டத்தில் இருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில் தேசிய பூங்கா அமைந்துள்ள பனிபடர்ந்த மலைப்பகுதிகளை சுற்றிப்பார்க்க உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், போலந்து நாட்டை சேர்ந்த 4 பேர் மற்றும் விமானி உட்பட 5 பேர், சிறிய ரக விமானம் ஒன்றில் டேனலி தேசிய பூங்கா நோக்கி பயணம் செய்தனர்.
அதிகளவிலான பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த போது திடீரென விபத்துக்குள்ளானது.
இதில், போலந்து நாட்டைச் சேர்ந்த 4 சுற்றுலா பயணிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விமானியை பற்றிய தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் அவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குறித்த சம்பவம் நிகழ்ந்த பகுதியில் வெப்பநிலை மைனஸ் 17 டிகிரிக்கும் கீழ் இருப்பதால் மீட்புப்பணிகளில் துரிதமாக செயல்படுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: