ஐரோப்பாவையும், சீனாவையும் இணைக்க ரஷ்யா அங்கீகாரம்!

Thursday, July 11th, 2019

ஐரோப்பாவையும், சீனாவையும் இணைக்கும் 2000 கிலோமீற்றர் நீளம் கொண்ட நெடுவீதியை நிர்மாணிப்பதற்கு ரஷ்யா அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஐரோப்பிய எல்லையில் இருந்து ரஷ்யா, கசகஸ்தான் எல்லை ஊடாக சீனா வரையில் இந்த பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான முதற்கட்ட பணிக்கான ரஷ்யாவின் பிரதமர் டிமிட்ரி மெட்விடேவ் அனுமதி வழங்கியுள்ளார்.

அரச மற்றும் தனியார் கூட்டு வேலைத்திட்டமாக இந்த பாதை நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்காக 9.4 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதை நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான பிரதான சரக்கு பரிமாற்று பாதையாக அமையும் என்று கூறப்படுகிறது.

Related posts: