எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறார் ஏர்டோவான் – ஈராக்!

Thursday, October 13th, 2016

துருக்கிய ஜனாதிபதி ஏர்டோவான், எரிகிற நெருப்பில், எண்ணெய் ஊற்றுகிறார் என, ஈராக் பிரதமரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் தலைவர்களுக்குமிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாட்டைத் தொடர்ந்தே இக்கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

ஈராக் அரசாங்கத்தின் அனுமதியின்றி, ஈராக்கில் நிலைகொண்டுள்ள துருக்கி இராணுவம், அங்கிருந்து வெளியேற வேண்டுமென, ஈராக் அரசாங்கம் கோரி வருகிறது.
ஆனால், அதை நிராகரித்துவரும் துருக்கி அரசாங்கம், ஈராக் அரசாங்கத்தையும் துச்சமாமகப் பேசி வருகிறது. அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த துருக்கிப் பிரதமர் பினாலி யில்டிரிம், “பக்தாத்திலுள்ள ஈராக் அரசாங்கம் என்ன சொன்னாலும், துருக்கிப் படைகள், ஈராக்கில் நிலைகொண்டிருக்கும்” எனத் தெரிவித்திருந்தார். எனினும், துருக்கிப் படைகள் வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை, ஈராக்கியப் பிரதமர் ஹைடர் அல்-அபாடி, மீளவும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், இதற்குப் பதிலளித்த துருக்கி ஜனாதிபதி ஏர்டோவான், “ஈராக்கியப் பிரதமர் அல்-அபாடிக்கு, அவரது எல்லை என்னவெனத் தெரிய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்துள்ள ஈராக்கிய அரசாங்கம், இரு நாடுகளுக்குமிடையிலான பிரச்சினையைத் தீர்ப்பது குறித்து, காத்திரமான நிலைப்பாட்டில் துருக்கி காணப்படவில்லை எனக் குறிப்பிட்டதோடு, இவ்விடயத்தில் “எரிகிற நெருப்பில் எண்ணெய் உற்றுவது போலச் செயற்படுகிறார்” என, துருக்கி ஜனாதிபதி மீது குற்றஞ்சாட்டியுள்ளது.

TURKISH-POLITICS-MILITARY-COUP

Related posts: