பிரித்தானிய மக்களின் தீர்ப்பால் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அதிர்ச்சி!

Friday, June 24th, 2016

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று பிரித்தானியாவில் நடந்த கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றிய அரசியல் தலைவர்கள் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ,மார்ட்டின் ஷுல்ஸ், இந்த முடிவைத் தான் மதிப்பதாகவும், ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தையும் யுரோ நாணயத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது பிரித்தானியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் ஒரு சோகமான நாள் என்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் , பிராங்க் வால்டர் ஸ்டெயின்மெயர் கூறியுள்ளார். ஆனால் பிரன்ஸிலும், நெதர்லாந்திலும் உள்ள தீவிர வலது சாரிக் கட்சிகளின் தலைவர்கள் தங்களது நாடுகளிலிலும், இதே போல கருத்துக்கணிப்புகள் நடத்தப்படவேண்டும் என்று கோரியிருக்கின்றார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.

150310053217_martin_schulz_624x351_epa

160624055310_uk_referendum_640x360_robstothardpa_nocredit

Related posts: