போரை இடைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கோரிக்கை!

Wednesday, November 8th, 2023

காசாவில் இடம்பெறும் போரை இடைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கோரியுள்ளார்.

மனிதாபிமான காரணங்களுக்காக போரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அவர் கோரியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் தொலைபேசி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பிலும் அவர்கள் கலந்துரையாடியதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

3 நாட்களுக்கு போரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜோ பைடன் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் அது தொடர்பான தகவல்களை வெள்ளை மாளிகை வெளிப்படுத்தவில்லை என சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், தற்காலிக போர் நிறுத்தம், ஹமாஸ் தரப்பினருக்கான இராணுவ உதவிகளை அதிகரிப்பதற்கு வாய்ப்பளிக்கும் என சில மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: