ஒரு டொலர் சம்பளமேனும் வேண்டாம்! – டொனால்ட் ட்ரம்ப்!

Saturday, November 12th, 2016

தற்போது உலகம் எங்கும் டொனால்ட் ட்ரம்ப் அலை வீசிக் கொண்டிருக்கிறது.பெரும் சர்ச்சைக்குரிய நபர் ஒருவர் உலக வல்லாதிக சக்தியாக திகழும் அமெரிக்காவின் ஜனாதிபதினாது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

பல கருத்துக் கணிப்புக்களை பொய்யாக்கி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து வெற்றி கொண்டார்.

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி ட்ரம்ப் என்பது உறுதியாகியுள்ள நிலையில், அவரின் அடுத்த செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என ஊடகங்கள் பேசத் தொடங்கியுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின் போது, தான் ஜனாதிபதி ஆனால், தனக்கு வழங்கும் சம்பளத்தை முழுமையாக நிராகரிப்பதாக தெரிவித்திருந்தார்.

“நான் ஜனாதிபதியாகினால் முதலாவதாக எனக்கு கிடைக்கும் சம்பளத்தை நிராகரிப்பேன். எனக்கு ஒரு டொலரேனும் அவசியம் இல்லை. சம்பளத்தை நிராகரிப்பதொன்றும் எனக்கு பெரிய விடயம் அல்ல…” என கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற தேர்தல் கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி ஒருவருக்கு வருடாந்தம் கிடைக்கும் சம்பளம் நான்கு இலட்சம் அமெரிக்க டொலர்களாகும். எனினும் அமெரிக்காவின் முன்னணி கோடிஷ்வரர்களில் டொனால்ட் ட்ரம்ப்பும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

400_13350

Related posts: