ஜப்பானிய தீவில் குவிந்த ஆயிரக்கணக்கான காகங்கள் – இயற்கை பேரழிவு வருமா என அச்சம்!

Sunday, February 19th, 2023

ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் சில தினங்களுக்கு முன் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் குவிந்ததால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஏதேனும் இயற்கை பேரழிவு வருகிறதென்றால், பறவைகள் கூட்டம் கூட்டமாக வேறு இடங்களுக்கு பயணிக்கும். கடந்த 2004ல் ஏற்பட்ட சுனாமியின்போதும் இதேபோன்ற நிகழ்வு நடந்துள்ளது.

அந்த வகையில் ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது.

அங்குள்ள கட்டடங்கள், வீதிகள் மற்றும் வாகனங்கள் என எங்கு பார்த்தாலும் காகங்கள் குவிந்திருந்தன. அதோடு சில காகங்கள் கூட்டம் கூட்டமாக பறந்து சென்றுக்கொண்டிருந்தன. இதனை பார்த்த மக்கள் இயற்கை பேரழிவு ஏற்படப்போகிறதோ என அச்சமடைந்தனர்.

தற்போதைக்கு பல நாடுகளில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுவருவதால் அதன் முன்னெச்சரிக்கையாக கூட காகங்கள் வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Related posts: