டோனி மீது தொடரப்பட்ட வழக்கு: உச்ச நீதிமன்றத்தால் இரத்து!

Saturday, April 22nd, 2017

மத உணர்வுகளை புண்படுத்தியதாக இந்திய கிரிக்கெட் வீரர் டோனி மீது தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.2013ம் ஆண்டு இந்துக்கடவுளான விஷ்ணு வடிவில் டோனி இருப்பது போன்ற படத்தை வணிக இதழ் ஒன்று அட்டைப்படத்தில் வெளியிட்டது. அந்தப்படத்தில் டோனியின் கரங்களில் காலணி உள்ளிட்ட பொருட்கள் இருப்பது போன்றும் சித்தரிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து கர்நாடகாவை சேர்ந்த ஜெயக்குமார் ஹிராமத் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல் ஆந்திராவிலும் தோனி மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம், டோனி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த பொலிசாருக்கு அறிவுறுத்தியது. இதனையடுத்து டோனி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, தோனி மீதான வழக்கை, விசாரணை நீதிமன்றம் குற்றவியல் வழக்காக எடுத்துக்கொண்டது சட்டத்தை பரிகாசம் செய்வது போல் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், டோனி மீது எந்த குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.

Related posts: