முகநூல் நிறுவுனர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்னிலை!

Wednesday, April 11th, 2018

முகநூல் நிறுவுனரான 33 வயதுடை மார்க் ஷக்கர்பெர்க் நாளைய தினம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்னிலையாக உள்ளார்.

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது முகநூல் ஊடாக தகவல்கள் பரிமாற்றப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து அவரிடம் விசாரணைகள்மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களை உத்தியோகபூர்வமற்ற முறையில் சந்தித்துள்ளார். அத்துடன், காங்கிரஸின் வணிக குழுவிடம் எழுத்துமூலமான அறிவிப்புஒன்றையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

மேலும் முகநூல் ஊடாக மனிதர்களுக்கு இடையில் சிறந்த தொடர்புகளை எதிர்பார்க்கின்ற போதும், அதனை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் தாம் தனிப்பட்ட முறையில்மன்னிப்பு கோருவதாகவும் ஷக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

Related posts: