இலண்டன் – சீனாவுக்கு இடையே உலகின் தொலை தூர புகையிரத சேவை!

Monday, May 1st, 2017

இலண்டனுக்கும் சீனாவுக்கும் இடையே 12000 கிலோ மீற்றர் தொலைவுக்கான சரக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

உலகின் அதிக தொலைவை கடக்கும் சரக்கு ரயிலாகவும், லண்டன் – சீனா இடையேயான வர்த்தக போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இரு நாடுகளுக்கு இடையே சரக்கு ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அனைத்து வித பணிகளும் முடிந்துள்ள நிலையில் முதல் முறையாக லண்டனிலிருந்து சீனாவுக்கு இந்த சரக்கு ரயில் கடந்த பத்தாம் திகதி தனது பயணத்தை தொடங்கியது.ஈஸ்ட் வின்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலில் பீர், பால், மருந்துகள், மெஷின்கள் போன்ற பொருட்கள் சீனாவுக்கு கொண்டு செல்லபட்டன.

லண்டனிலிருந்து பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா வழியாக ஈஸ்ட் விண்ட் ரயில் நேற்று சீனாவுக்கு வந்தடைந்தது.கப்பலில் இந்த தூரத்தை கடக்க 30 நாட்கள் தேவைப்படும்.ஆனால் கப்பலில் 20 ஆயிரம் கண்டெயினர்களை எடுத்து செல்லலாம் என்பதும், சரக்கு ரயிலில் 880 கண்டெயினர்களை மட்டுமே எடுத்து செல்ல முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: