பிரித்தானியாவை எச்சரிக்கும் வடகொரியா!

Saturday, April 7th, 2018

பிரித்தானிய கடற்கரையை அடையும் அளவுக்கான கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையை ஆறிலிருந்து 18 மாதங்களுக்குள் வடகொரியா ஏவுமென அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த ஏவுகணைகள் அணு ஆயுதங்களை ஏந்தி வரும் அளவிற்கு திறன் படைத்ததாக உருவாக்க முடியுமா என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை என பொது பாதுகாப்பு தேர்வுக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

இத்தகைய தாக்குதல் நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் வடகொரிய அச்சுறுத்தல்கள் குறித்து விசாரித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

வடகொரிய ஜனாதிபதி ஹிம் ஜோங் உன் மிகவும் கொடூர குணம் என்ற போதும் அவர் பகுத்தறிவாளர் என பிரித்தானிய நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. பிரித்தானியா ஒருபோதும் வடகொரியாவுக்கு அச்சுறுத்தலாக இல்லாத நிலையில் வடகொரியா சக்தி வாய்ந்த ஏவுகணையை பிரித்தானியா மீது ஏவும் என கருதுவது தேவையற்ற குழப்பத்தையே உருவாக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வடகொரியாவின் முக்கிய எதிரிகளாக அமெரிக்காவும் தென்கொரியாவும் மட்டுமே இருப்பதாகவும் ஆனால் குறித்த பகுதியில் போர் மூளும் நிலை ஏற்பட்டால் இராணுவ உதவிகளை அளிக்க எந்த சட்டச் சிக்கலும் இருக்காது எனவும் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

Related posts: