வடகொரிய – ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!

Friday, April 26th, 2019

ரஷ்யாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள துறைமுக நகரான விளாடிவொஸ்ரொக்கிற்கு அருகில் அமைந்துள்ள ருஷ்கி தீவில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோருக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளையும் வலுப்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, இருநாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றையும் உறவுகளையும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதேநேரம், இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை விரிவுபடுத்துவதற்கான மிகச்சிறந்த சந்திப்பாக இது அமையும் என வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts: