பண்டிகைக்கால கொள்வனவில் உள்ளூர் பொருட்களை அதிகளவில் கவனம் செலுத்தங்கள் – பாரதப் பிரதமர் வலியுறுத்து

Sunday, October 25th, 2020

பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்கும்போது உள்ளூர் பொருட்களை அதிக அளவில் வாங்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

அவ்வகையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் உரையாற்றும்போதே பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் இந்த ஆண்டு மிகவும் எளிமையாக கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பண்டிகை கொண்டாட்டங்கள் வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும். பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்கும்போது உள்ளூர் பொருட்களை அதிக அளவில் வாங்க வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

காதி விற்பனை நிலையங்களில் விற்கப்படும் முக கவசங்களை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. வரிசையாக பண்டிகைகள் வர உள்ளதால் தனிமனித இடைவெளியுடன் பண்டிகைகளை கொண்டாடுங்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்துள்ளமை குறிப்பிடத்தக்கதது

Related posts: