இஸ்ரேல் வான் தாக்குதல் – காசாவில் இதுவரை காசாவில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிப்பு!
Monday, October 30th, 2023
இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த ஒக்டோபர் 7 ஆம் திகதிமுதல் இதுவரை காசாவில் 8 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்டவர்களில் 41.75 சதவீதமானோர் சிறார்கள் என காசாவில் நிலைக் கொண்டுள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, 3 ஆயிரத்து 334 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமான சிறார்கள் காணாமல் போயுள்ளனர். அத்துடன் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காசாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளதாக அங்கு நிலைக் கொண்டுள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
உலக நாடுகளின் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வட கொரியாவில் மாநாடு
ஆயுததாரிகளால் சிறைச்சாலை உடைத்து 28 பேர் விடுவிப்பு!
அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம் - பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு, பிர...
|
|
|


