உலக நாடுகளின் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வட கொரியாவில் மாநாடு

Friday, May 6th, 2016
வடகொரியாவில் தொழிலாளர் கட்சியின் தலைவர் கிம் ஜாங் உன் அதிபராகப் பதவி வகித்து வருகிறார். இவரது தந்தை கிம் 2 சங்கின் மறைவுக்குப் பின்னர் அதிபராகப் பொறுப்பேற்ற இவர், அணு ஆயுதங்கள் குறித்த பரிசோதனைகளை நடத்த ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து, வடகொரியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அமைப்பு பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், நாட்டு மக்களிடையே தனக்குள்ள ஆதரவை உலகிற்கு அறிவிக்கும் வண்ணம் ஆளும் கட்சி மாநாட்டை நடத்த கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். 

இந்த மாநாட்டில் அணு ஆயுதம் தொடர்பான முக்கிய அறிவிப்புக்கள் வெளியிடப்படும் என தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. கடந்த 36 ஆண்டுகளில் நடக்கும் முதல் மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: