அபுதாபியில் இந்துக் கோயில் – நாளை பாரதப் பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார் என தகவல்!

Wednesday, February 14th, 2024

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஐக்கிய அரபு அமீரகம்  சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அபுதாபியில் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்துக் கோயிலை நாளை திறந்து வைக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோயிலானது பல்வேறு வசதிகளுடன் சுமார்  27 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள  உலக உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார் என்பதும் குறிப்பிடதத்க்கது.

000

Related posts: