இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 11 பேரைக்கொண்ட குழு நியமனம்!

Wednesday, November 4th, 2020

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த 11 உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் 2005 ஆம் ஆண்டின் பிரிவு 38 (பிரிவு 32) இன் சுற்றுலா சட்டத்தின் கீழ் குறித்த  ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக ஜெட்விங் சிம்பொனி தலைவர் ஹிரான் கூரே, கன்னைசன்ஸ் டி சிலான் தலைவர் சந்திர விக்ரமசிங்க, ஷங்ரி லா ஹோட்டல் கொழும்பு துணைத் தலைவர் திமோதி ரைட், சாந்தனி வெல்னஸ் ரிசார்ட் நிறுவனர் விக்கம் நவகமுவ, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி விபுலா கிராடில்லே கடந்த காலத் தலைவரும் செயற்குழு உறுப்பினருமான சி.எச்.எஸ்.ஜி.ஏ ட்ரெவின் கோம்ஸ், டெய்லி எஃப்டி ஆசிரியரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான நிஸ்தர் காசிம், எக்ஸ்பீடியா பகுதி மேலாளர் சவி கோதகண்ட எமார்க்கெட்டிங் தலைமை நிர்வாக அதிகாரி ரஜித தஹநாயக்க, ரஞ்சித் டி சில்வா (செயலாளர்) மற்றும் நிமேஷ் ஹேரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ் ஆலோசனைக்குழுவின் உதவியுடன், தொழில்துறையை புதுப்பிக்க அமைச்சின் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தவும், சுற்றுலாத் துறைக்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உதவியை அடையவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதியளித்துள்ளார்.

இலங்கையை ஒரு சுற்றுலாத் தலமாக நிலைநிறுத்துவதற்கும், சுற்றுலா தலங்களை வளர்ப்பதற்கும் முறையான பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை இதன் மூலம் வலியுறுத்த முடியுமென தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வவுனியாவில் சட்டவிரோத கும்பல்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது - நாடாளுமன்ற உறுப்பினர் தி...
இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் திறந்துவைப்பு!
பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக மக்களை மாற்றுவதன் மூலம், சரிவடையாத வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்...