வவுனியாவில் சட்டவிரோத கும்பல்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது – நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் எச்சரிக்கை!

Monday, April 5th, 2021

வாள்வெட்டு உள்ளிட்ட சட்டவிரோத  செயற்பாடுகளுக்கு வவுனியா மாவட்டத்தில் இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிய்ன வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான குலசிங்கம் திலீபன் அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களின் வன்முறைகள் பொலிஸாரின் உதவியுடன் விரைவில் கட்டுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வவுனியா குருமன்காடு மற்றும் திருநாவற்குளத்திற்கு இடைப்பட்ட பகுதியில் வாள் மற்றும் கத்திகளுடன் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் லிடுத்துவந்த குழுவினர் இன்றையதினம் பல்வேறு அடாவடித்தனங்களை அப்பகுதியால் சென்றுவருவோருக்கு ஏற்படுத்தியிருந்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பட்டிருந்தார்.

மேலும் வவுனியா குருமன்காடு பகுதியில் பலமணிநேரமாக நடைபெற்ற குறித்த சம்பவத்தை பொலிசாருக்கு தெரிவிப்பதற்கு எவரும் முன்வராத நிலையில், எமக்கு பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியிருந்ததாகவும் திலீபன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வவுனியா நகரம், ஓமந்தை, பூவரசன்குளம் மற்றும் ஈச்சங்குளம் பொலிசாரோடு அப்பகுதிக்கு நாம் நேரடியாக சென்றிருந்த நிலையில், குறித்த குழுவினர் தப்பிச்சென்றுவிட்டனர். எனினும் சட்டவிரோத கும்பலின் பெயர்கள் அறியப்பட்டு பொலிசாருக்கு வழங்கப்பட்டதன் அடிப்படையில் பொலிஸார் நடவடிக்கையில் இறங்கினர்.

அத்தோடு, குறித்த சட்டவிரோத கும்பலின் தாக்குதலால் தலை மற்றும் முகத்தில் வாள்வெட்டுக்கு இலக்காகிய நபரையும் நேரில் சென்று பொலிசாருடன் பார்வையிட்டிருந்ததுடன் இவ்வாறான பிரச்சனையை ஏற்படுத்துபவர்களைக் கண்டால் உடனடியாக பொலிசாருக்கும் தமக்கும் அறியத் தருமாறும் பொதுமக்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தனிநபர் தகவல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கை - 19 ஆம் திகதிமுதல் மண்ணெண்ணெயும் வ...
புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம் - தீர்வைக் காண்பதற்காக மூவரடங்கிய குழுவை நியமித்தார்...
சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதை துரிதப்படுத்துங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர்...