இந்திய இராணுவ தளபதி நேபாளத்துக்கு 3 நாள் பயணம்!
Wednesday, November 4th, 2020
இராணுவ தளபதி நரவானே மூன்று நாள் சுற்றுப்பயணமாக நேபாளம் செல்லவுள்ளார்.
இந்தியா – நேபாளத்திற்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவ தளபதியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதன்போது நேபாள ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி, பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஆகியோரை நரவானே சந்திப்பார் என்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் இந்திய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்தியா- நேபாள நாட்டு இராணுவங்களுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும், இரு நாட்டு எல்லையை திறன்பட நிர்வகிப்பது குறித்தும் தளபதி தாப்பாவுடன், நரவானே விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் கருதப்படுகிறது.
Related posts:
ஆசிபா பாலியல் கொலையில் அரசியல் வேண்டாம் - இந்தியப் பிரதமர் மோடி!
‘BOO’ இதயம் வெடித்து உயிரிழப்பு!
புளோரிடாவில் அவசரகால பிரகடனத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி அனுமதி!
|
|
|
மேற்குலக நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவில் நீண்டகாலம் தங்கியிருக்க வேண்டி ஏற்படும் - ரஷ்ய அதி...
இலங்கை நெருக்கடி புதுடெல்லியில் முக்கிய பேச்சு - கொழும்பிலிருந்து புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டனர் இந்...
சூடானில் இராணுவம் - துணை இராணுவம் இடையே கலவரம் - இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக...


