மேற்குலக நாடுகள் ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவில் நீண்டகாலம் தங்கியிருக்க வேண்டி ஏற்படும் – ரஷ்ய அதிபர் புடின் தெரிவிப்பு!

Saturday, June 11th, 2022

மேற்குலக நாடுகள் தமது நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயுவில் நீண்டகாலம் தங்கியிருக்க வேண்டி ஏற்படும் என ரஷ்ய அதிபர் விளாமீர் புடின் தெரிவித்துள்ளார்.

போருக்கு முன்னர் பெற்றுக்கொண்டதை விட, தற்போது எண்ணெய் மூலம் அதிக இலாபத்தை ரஷ்யா பெற்றுக்கொள்ளலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், அவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் தனது மொத்த எரிவாயு இறக்குமதியில் 40 வீதத்தை ரஷ்யாவிடம் இருந்து பெற்றுவருகின்றது.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ரஷ்ய எண்ணெயைச் சார்ந்திருப்பதை 90 வீதத்தால் குறைப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

எனினும் ரஷ்யாவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் எரிவாயு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை. இதனால், ரஷ்யாவின் அனைத்து எரிசக்தி தயாரிப்புகளுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு எதிராக ரஷ்யாவின் எரிசக்தி துறை மீதான தடைகளை அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ளது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரித்து வருவதால், ஒட்டுமொத்த விநியோகத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இளம் தொழில்முனைவோர் மத்தியில் உரையாற்றிய விளாடிமீர் புடின், உலக சந்தையில் எண்ணெய் அளவு குறைவடைவதால், விலைகள் அதிகரித்து வருகின்றன.

இதன்மூலம் எண்ணெய் நிறுவனங்களின் இலாபம் அதிகரித்து வருகின்றது என ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: