எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக அவைத்தலைவர் சிவஞானம் ஒருங்கிணைப்பு குழு தலைவரால் நியமனம்!

Thursday, October 26th, 2023

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் இன்றைய தினம் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

குறித்த திட்டங்களுக்கான காணிகளை வழங்குவதற்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதி வழங்குமாறு நிறுவனத்தின் பணிப்பாளரால் கோரிக்கை விடுக்கப்பட்ட போது காணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரினால் எட்டு திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து சமர்ப்பிக்குமாறு அவை தலைவர்

சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் ஜனாதிபதியின் வடக்குக்கான இணைப்பாளர் மற்றும் அந்தந்த பிரதேச செயல்கள் அடங்கிய குழு இந்த எட்டு திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இதனிடையே யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவசாயத் திணைக்களத்தினால் இந்த வருடத்திற்கான முன்மொழிவு ஒன்று இன்றையதினம் ஒழுங்கிணைப்பு குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட போது குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதாவது அரசாங்க நிதியில் செயற்படுத்தப்படும் செயற்திட்டத்தினை வருட இறுதியில் நடைமுறைப்படுத்த அனுமதி கோரினால் எவ்வாறு அந்த திட்டத்தினை செயற்படுத்த முடியும்? அவ்வாறு செயற்படுத்த முடியாது இது ஒரு நையாண்டியான விடயம் என கடுமையான தொனியில் அதிகாரிகளை எச்சரித்தார்.

குறிப்பாக மக்களுக்கான திட்டங்களை இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏன் தெரியப்படுத்துவதென்றால் மக்கள் பிரதிநிதிகள் அதனை ஏற்று அதற்குரிய ஒப்புதலை வழங்குவதற்காகவே எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறு செயற்பட வேண்டாம் என ஆளுநர் அதிகாரிகள் கடிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே

உடுப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபான சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் குறிப்பாக மதுபான சாலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் கோரிக்கை விடுக்கப்பட்டது

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்து அங்கயன் இராமநாதன், – உடுப்பிட்டி மக்கள் வங்கிக்கு அருகில் உள்ள ஒரு வீடு ஒன்றில் சட்டவிரோதமான மதுபான சாலை ஒன்று இயங்கி வருகின்றது.

அதாவது மதுபான சாலைக்கு செல்வோர் பெல் அடித்து உள்ளே சென்று மதுபானத்தை கொள்வனவு செய்ய முடியும். எனவே அதனை கட்டுப்படுத்துமாறு கோரிய போது குறித்த பிரிவுக்கான பொலிஸ் பொறுப்பதிகாரியினை உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அபிவிருத்தி குழுத்தலைவரால் கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: