இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி – பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு!

Saturday, February 27th, 2021

இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கவுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் அரச பயணம் மேற்கொண்டு கடந்த 23ஆம் இலங்கை வந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களை சந்தித்து பேசியிருந்தார்.

இதன்போது பாதுகாப்பு, பயங்கரவாதம், ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் உளவுத்தகவல் பரிமாற்றம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உதவி குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டன.

இந்நிலையில், இம்ரான் கானின் இலங்கை விஜயம் தொடர்பாக இருநாடுகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் நிதியுதவி அறிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர், இலங்கையில் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கும் நிதியுதவி வழங்கியுள்ளார்.

மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் பாகிஸ்தான், சமீபத்திய கோவிட் – 19 ஊரடங்கால் மேலும் பெரும் பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகிறது.

இவ்வாறான நிலையில், இலங்கைக்கு, பாகிஸ்தான் கோடிக்கணக்கான நிதியுதவி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: