நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Sunday, October 16th, 2022

திருத்தப் பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் அலகு அடுத்த வாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது மின்னுற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 78 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி 300 மெகாவோட் மின்சாரம் அடுத்த வாரம் தேசிய கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

இதனிடையே

மறுசீரமைப்பு குழுவின் இறுதி அறிக்கை அதிபர் மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதன் பின்னர் இலங்கை மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனம் என்பவற்றை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(15.10.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“இலங்கை மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனம் என்பவற்றை மறுசீரமைக்கும் செயற்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன் முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரத்தில் இந்த விடயம் தொடர்பில் அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. மறுசீரமைப்பு குழுவின் இறுதி அறிக்கையை அடுத்த வாரம் அதிபர் மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

அவற்றுக்கு அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனம் என்பவற்றை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: