தரமிக்க சேவைக்கு அமைச்சரவை அங்கிகாரம்!
Thursday, January 19th, 2017
நாட்டில் முச்சக்கரவண்டிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற பயணிகள் போக்குவரத்து மற்றும் பாடசாலை வான் சேவையினை தரமிக்கதாக விருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இதற்காகக் கட்டுப்பாட்டு அதிகாரசபையொன்றை ஸ்தாபிப்பதற்கு 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டது.
குறித்த முன்மொழிவினை செயற்படுத்தும் வகையில் அது தொடர்பில் ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவென அமைச்சின் செயலாளர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கே இந்த அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts:
மாற்று ஏற்பாடுகளின்றி மக்கள் வெளியேற்றம் : குருநகர் நீதிமன்ற குடியிருப்பு பகுதியில் பதற்றம்!
இலங்கையில் சடுதியாக அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள் - 3 நாட்களில் 471 பேர் உயிரிழப்பு!
IMF உடனான வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது - ஜப்பானிய நிதிய...
|
|
|


