இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த தீர்மானம் – இறக்குமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் தெரிவிப்பு!

Tuesday, April 21st, 2020

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில் பண பரிவர்தனை வீதம் மற்றும் நிதிச்சந்தை ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைப்பதை நோக்காக கொண்டு குறிப்பிட்ட இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இறக்குமதி மட்டுப்படுத்தப்படவுள்ள பொருட்கள் தொடர்பான தகவல்களை ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய பாஸ்மதி அரசி தவிர வேறு அரிசி வகைகள் வேர்க்கடலை உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் உள்ளிட்ட உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஏராளமான பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டுமானப் பொருட்கள், மின் மற்றும் மின்னணு பாகங்கள், கோதுமை மா ஆகியவற்றை கடன் அடிப்படையில் அல்லது மூன்று மாத காலத்திற்கு பின்னர் கட்டணம் செலுத்தும் அடிப்படையில் இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: